பார்த்தவுடன் காதல் (Love at First Sight)
எப்படீங்க
பார்த்ததும் காதல் வரும்? அப்படியே
வந்தாலும் நீடிக்குமா?
இதற்கு
என்னுடைய பதில் ஆம் என்று
தான் இருக்கும்.
ஒரு பெண்ணையோ, ஆணையோ முதலில் பார்க்கும்
போது அல்லது கொஞ்ச நேரம்
பேசும் போது கண்டிப்பா அவங்க
நம்ம குணத்தோட ஒத்து போவாங்க, அல்லது
அவங்கள பார்க்கும் போதே ஒரு வித
உணர்வு உள்ள ஓட ஆரம்பிச்சிடும். அது
காதல் கெமிக்கல் ரியாக்ஷன் ஆ கூட இருக்கலாம்.
ஒரு விதமான உணர்வு உணர்த்தும்
இவங்க தான் நம்ம சாய்ச்சுனு.
ஒரு சிலரோட பழக்கவழக்கங்கள் ரொம்ப
நல்ல இருக்கும், அத புரிஞ்சுக்க அதிக
நேரம் தேவைப்படாது. அதற்கு அவங்க பெரிய
காரியமோ, ஹீரோயிசமோ செய்ய வேண்டிய அவசியம்
இல்ல.
ஒரு சிலரரோட நிதானமான பேச்சு,
சிலரோட உதவும் மனப்பான்மை, மழழை
பேச்சு, சமயோஜிதன புத்தி(presents of mind), சிரிக்க வைக்கும் திறமை,
மற்றவர்களை கவரும் திறமை, நம்
மேல் காட்டும் அக்கறை, இந்த மாறி
ஏதோ ஒன்று நம்மள அவங்க
மேல கவனம் செலுத்த வைக்கும்.
அது ஒரு சிலர்க்கு காதலா
கூட மாறும்.
இந்த காதல் நீடிக்குமான்னு என்ன
கேட்டா? அதெல்லாம் அவங்க திறமையை பொறுத்ததுனு
சொல்வேன்.