பெண் பிள்ளைகள் எவ்வாறு வளர்க்க பட வேண்டும்?
பெண்கள்
இயற்கையாகவே மென்மையானவர்களாகவும் வலிமை குறைந்தவர்களாகவும் பிறக்கின்றனர்.
ஆனால் மனதளவில் பெண்கள் மிகவும் வலிமையானவர்கள்,
தைரியமானவர்கள், தனித்துவம் வாய்ந்தவர்கள் மற்றும் அன்பானவர்கள். பிள்ளைகளில்
வித்யாசம் ஒன்றும் இல்லை ஆணோ,
பெண்ணோ, வளர்ப்பு முறையே மிகவும் முக்கியமாக
கருதப்படுகிறது.
கல்வி:-
ஒரு பெண்ணுக்கு
கல்வி கிடைத்தால் ஒரு குடும்பத்திற்கே அதனால் பயனுண்டு. பெண் பிள்ளைகள் படிப்பறிவு
பெறுவது மிகவும் அவசியம். தன்னிச்சையான முடிவுகள் எடுக்கவும் தன்னிச்சையாக செயல்படவும்
கட்டாயம் கல்வி அவசியம். கல்வி எந்த அளவு அறிவு என்பது நிச்சயமோ, அதே அளவு கல்வி என்பது
தகுதியையும் நிர்ணயிக்கும். ஆதலால் பெண் பிள்ளைகளின் கல்விக்கு அதிக முக்கியத்துவம்
பெற்றோர்கள் தர வேண்டும்.
சுதந்திரம்:-
எதுவெல்லாம் சுதந்திரம்
என்பதை தெளிவாக உணர்த்த வேண்டியது பெற்றோரின் கடமையாக கருதப்படுகிறது. பிடித்த உடை
அணிவதும் தனியே செல்வதும் எந்த அளவு சுதந்திரம் என்பதில் தெளிவாக இருக்கும் நாம், நம்முடைய
வேலைகளை நாமே செய்வதிலும் பிறரை சார்ந்து வாழ்வதையும் மாற்றி கொள்ள வேண்டும். பெண் பிள்ளைகள் பெற்றோரிடம்
இருக்கும் போது பெற்றோருக்கு வருவாய் ஈட்டுவதிலும் அவர்களை கவனிப்பதில் முன்னைப்பு
காட்டவேண்டும்.
ஒரு ஆண் பெற்றோருக்கு
என்ன கடைமைகளை செய்கிறானோ, அதே கடமை பெண்ணிற்கும் உண்டு. இது ஆணுக்கு பெண் நிகர் என்பதை
உணர்த்துவதற்காக அல்ல. பெண்ணிற்கும் அதே கடமையும் பொறுப்பும் இருக்கிறது என்பதை உணர்துவர்தற்கு.
ஒவ்வொரு பெண் பிள்ளைகளும் தன்னுடைய சுந்தந்திரத்திலும் தன்னுடைய எல்லையிலும் வாழ்ந்து
சிறப்பது நல்லது.
சுயமரியாதை:-
ஒவ்வொரு பெண் பிள்ளைகளையும்
சுயமரியாதையுடன் வளர்க்க முற்படுங்கள். வரதட்சணை வாங்குவது எவ்வளவு தவறோ அதே அளவு தவறு
தான் தனக்கு வரும் மணமகனிடம் அதிகம் எதிர் பார்ப்பது. சற்று மாறாக தன்னுடைய வருங்கால
கணவனுக்கு தன்னால் எந்த அளவு குடும்பத்திலும், வருவாயிலும் உதவி செய்ய முடியும் என்று
யோசிக்க பழகவேண்டும்.
மேலே குறிப்பிட்டவை
பெண்ணுக்கு மட்டும் அல்ல ஆணுக்கும் பொருந்தும் ஆனால் இன்றைய பெண்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது.
பெண் பிள்ளைகளை தங்களுடைய ஒவ்வொரு பருவத்தையும்
ரசித்து, உணர்ந்து வாழக்கற்று கொடுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டு.
Comments
Post a Comment