தாழ்வு மனப்பான்மையை எப்படி எதிர் கொள்வது?
தாழ்வு
மனப்பான்மை இல்லாத ஒருவரை இந்த
உலகில் நாம் காண முடியாது.
ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சில
விஷயங்களில் தாழ்ந்தே காணப்படுகிறோம்.
தாழ்வு மனப்பான்மை எப்பொழுது
உருவாகிறது?
நாம் உடல்வாகில் மற்றவரை போல் இல்லாத
போதோ அல்லது மற்றவர் போல்
சில செயல்களை செய்ய இயலாதபோதோ நாம்
நம்மையும் அறியாமல் நம்மை மற்றவருடன் ஒப்பிட்டு
கொள்ள தொடங்குகிறோம் அவ்வாறு செய்யும் போது
நாம் மற்றவரை விட தாழ்ந்து
காணப்படும் போது ஒரு விதமான
வலி மனதுள் எழ ஆரம்பிக்கும்
இதுவே நாளடைவில் தாழ்வு மனப்பான்மையாக மாறும்.
ஒரு புள்ளியில் நாமே நம்மை தாழ்வாக
என்ன தொடங்குவோம். இப்படியான சூழலில் நிறைய பிரச்சனைகளையும்
தோழ்விகளையும் சந்திக்க நேரிடும்.
எவ்வாறு
தாழ்வு மனப்பான்மையை எதிர் கொள்வது:-
நாம் வாழும் வாழ்க்கை மிகவும்
சிறிய எண்ணிக்கையிலான நாட்களைக்கொண்டது. அதை நாம் உணர்வதே
இல்லை. வாழ்க்கையின் பாதி நாட்களை நாம்
இழந்தவைகளையும் நம்மால் பெற முடியாதவைகளை
பற்றியும் இன்னும் சில நேரங்களில்
மற்றவர்களின் குறைகளைப்பேசியும் செலவழிக்கிறோம்.
நம் வாழ்க்கை மிகவும்
நிலையற்ற சொற்ப நாட்களை கொண்டது.
ஒரே ஒரு முறை வாழும்
இந்த வாழ்க்கையை தெளிவாக, மகிழ்ச்சியாக, பிரியோஜனமாக வாழ கற்று கொள்ள
வேண்டும்.
திறமைகளை வெளிப்படுத்துதல்:-
ஏதோ ஒரு திறமை நம்மில்
இருக்க தான் செய்யும். சிலர்
ஓவியம் வரைவார்கள், சிலர் கவிதை , கதை
எழுதுவார்கள். சிலர் நன்றாக சமைப்பார்கள்,
சிலர் கோலம் போடுவார்கள். சிலர்
பாட்டு நன்றாக பாடுவார்கள் இது
போன்று நம்மிடம் ஓரத்தில் ஒளிந்திருக்கும் நம்முடைய திறமைகள் மேல் நாம் கவனம்
செலுத்த வேண்டும். அதற்காக நாம் பெரிய
முயற்சிகள் ஒன்றும் எடுக்க வேண்டியது
இல்லை. நம்முடைய மன திருப்திக்காக
செய்தால் போதும். அப்பொழுது நாமும்
ஏதோ ஒரு விதத்தில் நேர்மறையான
குணங்களை உடையவர்கள் என்பதை உணர்வோம். இது
சிறிது தாழ்வு மனப்பான்மையிலிருந்து நம்மை வெளியே
கொண்டு வரும்.
சிந்தனைகளை மாற்றுதல்:-
அதே பழைய காரணங்களை சொல்லி
கொண்டு இருக்காமல் நம்முடைய சிந்தனைகளை மாற்றி கொள்ள வேண்டும்.
எதிர்மறையான சிந்தனைகளை தவிர்க்க வேண்டும். அவ்வாறு தாழ்வு மனப்பான்மை
தோன்றும் நேரத்தில், நாம் நம்முடைய மனதை
வேறு விஷயங்களில் செலுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக
நல்ல புத்தகங்களை வாசிக்கலாம், நல்ல விஷயங்களை சிந்திக்கலாம்,
நம்முடைய நலன் விரும்பிகளுடன் பேசலாம்.
சிந்தனைகளையும் பழக்க வழக்கங்களையும் மாற்றும்
பொழுது நம்முடைய செயல்பாடுகளிலும் மாற்றம் வரும்.
நம் மீது நம்பிக்கை
தோன்ற
வேண்டும்:-
முதலில்
நாம் நம்மை நேசிக்க பழக
வேண்டும். நம்முடைய நல்ல விஷயங்களை உணர
வேண்டும். உணர்ந்து அதை நாம் ஊக்குவிக்க
வேண்டும். இறைவனுடைய ஒவ்வொரு படைப்பும் அதிசயமானவை
மற்றும் அழகானவை. அதனால் நாம் அதிசயமான
மற்றும் அழகான பிறப்பு என்பதை
உணர்ந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
நம்முடைய பிறப்பின் நோக்கத்தை உணர்ந்து வாழ பழகி கொள்ள
வேண்டும். நம் திறமைகள் மீது
நம்பிக்கை வைத்து ஒவ்வொரு படியாக
முன்னேற வேண்டும். மற்றவர்களின் கருத்துக்களை கொண்டு நம்மை நாம்
எடை போட கூடாது. அனைவரும்
தனித்துவமானவர்கள் மற்றும் வெவ்வேறு காரணங்களுக்காக
படைக்கப்பட்டவர்கள் என்பதை உணர வேண்டும்.
நம் மீது நம்பிக்கை வளர்த்து
கொண்டு, நம்முடைய தேவைகளை நாமே பூர்த்தி
செய்து கொள்ள வேண்டும்.
திறமைகளை
வெளிப்படுத்தி, சிந்தனைகளை மாற்றி நம் மீது
அதிக நம்பிக்கை வைக்கும் போது, தாழ்வு மனப்பான்மை
என்பது நம்மிடம் மறைய தொடங்கும்.
Comments
Post a Comment