Posts

பெண் பிள்ளைகள் எவ்வாறு வளர்க்க பட வேண்டும்?

பெண்கள் இயற்கையாகவே மென்மையானவர்களாகவும் வலிமை குறைந்தவர்களாகவும் பிறக்கின்றனர் . ஆனால் மனதளவில் பெண்கள் மிகவும் வலிமையானவர்கள் , தைரியமானவர்கள் , தனித்துவம் வாய்ந்தவர்கள் மற்றும் அன்பானவர்கள் . பிள்ளைகளில் வித்யாசம் ஒன்றும் இல்லை ஆணோ , பெண்ணோ , வளர்ப்பு முறையே மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது . கல்வி:- ஒரு பெண்ணுக்கு கல்வி கிடைத்தால் ஒரு குடும்பத்திற்கே அதனால் பயனுண்டு. பெண் பிள்ளைகள் படிப்பறிவு பெறுவது மிகவும் அவசியம். தன்னிச்சையான முடிவுகள் எடுக்கவும் தன்னிச்சையாக செயல்படவும் கட்டாயம் கல்வி அவசியம். கல்வி எந்த அளவு அறிவு என்பது நிச்சயமோ, அதே அளவு கல்வி என்பது தகுதியையும் நிர்ணயிக்கும். ஆதலால் பெண் பிள்ளைகளின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் பெற்றோர்கள் தர வேண்டும். சுதந்திரம்:- எதுவெல்லாம் சுதந்திரம் என்பதை தெளிவாக உணர்த்த வேண்டியது பெற்றோரின் கடமையாக கருதப்படுகிறது. பிடித்த உடை அணிவதும் தனியே செல்வதும் எந்த அளவு சுதந்திரம் என்பதில் தெளிவாக இருக்கும் நாம், நம்முடைய வேலைகளை நாமே செய்வதிலும் பிறரை சார்ந்து வாழ்வதையும்  மாற்றி கொள்ள வேண்டும். பெ...

பார்த்தவுடன் காதல் (Love at First Sight)

எப்படீங்க பார்த்ததும் காதல் வரும் ? அப்படியே வந்தாலும் நீடிக்குமா ? இதற்கு என்னுடைய பதில் ஆம் என்று தான் இருக்கும் . ஒரு பெண்ணையோ , ஆணையோ முதலில் பார்க்கும் போது அல்லது கொஞ்ச நேரம் பேசும் போது கண்டிப்பா அவங்க நம்ம குணத்தோட ஒத்து போவாங்க , அல்லது அவங்கள பார்க்கும் போதே ஒரு வித உணர்வு உள்ள ஓட ஆரம்பிச்சிடும் .  அது காதல் கெமிக்கல் ரியாக்ஷன் ஆ கூட இருக்கலாம் . ஒரு விதமான உணர்வு உணர்த்தும் இவங்க தான் நம்ம சாய்ச்சுனு . ஒரு சிலரோட பழக்கவழக்கங்கள் ரொம்ப நல்ல இருக்கும் , அத புரிஞ்சுக்க அதிக நேரம் தேவைப்படாது . அதற்கு அவங்க பெரிய காரியமோ , ஹீரோயிசமோ செய்ய வேண்டிய அவசியம் இல்ல . ஒரு சிலரரோட நிதானமான பேச்சு , சிலரோட உதவும் மனப்பான்மை , மழழை பேச்சு , சமயோஜிதன புத்தி (presents of mind), சிரிக்க வைக்கும் திறமை , மற்றவர்களை கவரும் திறமை , நம் மேல் காட்டும் அக்கறை , இந்த மாறி ஏதோ ஒன்று நம்மள அவங்க மேல கவனம் செலுத்த வைக்கும் . அது ஒரு சிலர்க்கு காதலா கூட மாறும் . இந்த காதல் நீடிக்குமான்...

தாழ்வு மனப்பான்மையை எப்படி எதிர் கொள்வது?

தாழ்வு மனப்பான்மை இல்லாத ஒருவரை இந்த உலகில் நாம் காண முடியாது . ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சில விஷயங்களில் தாழ்ந்தே காணப்படுகிறோம் . தாழ்வு மனப்பான்மை எப்பொழுது உருவாகிறது ? நாம் உடல்வாகில் மற்றவரை போல் இல்லாத போதோ அல்லது மற்றவர் போல் சில செயல்களை செய்ய இயலாதபோதோ நாம் நம்மையும் அறியாமல் நம்மை மற்றவருடன் ஒப்பிட்டு கொள்ள தொடங்குகிறோம் அவ்வாறு செய்யும் போது நாம் மற்றவரை விட தாழ்ந்து காணப்படும் போது ஒரு விதமான வலி மனதுள் எழ ஆரம்பிக்கும் இதுவே நாளடைவில் தாழ்வு மனப்பான்மையாக மாறும் . ஒரு புள்ளியில் நாமே நம்மை தாழ்வாக என்ன தொடங்குவோம் . இப்படியான சூழலில் நிறைய பிரச்சனைகளையும் தோழ்விகளையும் சந்திக்க நேரிடும் . எவ்வாறு தாழ்வு மனப்பான்மையை எதிர் கொள்வது:- நாம் வாழும் வாழ்க்கை மிகவும் சிறிய எண்ணிக்கையிலான நாட்களைக்கொண்டது . அதை நாம் உணர்வதே இல்லை . வாழ்க்கையின் பாதி நாட்களை நாம் இழந்தவைகளையும் நம்மால் பெற முடியாதவைகளை பற்றியும் இன்னும் சில நேரங்களில் மற்றவர்களின் குறைகளைப்...